கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த கோபசந்திரம் அருகே அமைந்துள்ள தென்பெண்ணை ஆற்றின் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மிதந்தது வந்துள்ளது.
சூளகிரி போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆற்றில் இருந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தென்பெண்ணை ஆற்றின் கைப்பற்றப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் கால்தவறி விழுந்துள்ளாரா அல்லது வேறு எங்காவது தவறி விழுந்து இறந்த நிலையில் ஆற்றில் இப்பகுதியில் அடித்து வரப்பட்டாதா என சூளகிரி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்
.gif)
