"நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்-2022"அமைதியாகவும், சுமுகமாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், எதிர்வரும் 19.02.2022 மற்றும் 22.02.2022 ஆகிய தினங்களில் "நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்-2022" வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை” நடைபெறுவதை முன்னிட்டு, 17.02.2022 காலை 10.00 மணிமுதல் 19.02.2022 (வாக்கு பதிவு நாள்) அன்று நள்ளிரவு 12.00 மணிவரையும் மற்றும் 22.02.2022 (வாக்கு எண்ணிக்கை நாள்) அன்றும் தேர்தல் நடைபெறும் பகுதிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் (TASMAC) மதுக்கூடங்கள் மற்றும் [FL-2 to FL-11 (Except FL-6)] உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்து வகை இந்திய தயாரிப்பு அயல்நாட்டு ஸ்பிரிட், பீர் மற்றும் வைன்(IMFL, Beer and Wine) தயாரிப்பு நிறுவனங்கள் விற்பனை செய்யவோ அல்லது மதுபானங்கள் வாகனங்கள் மூலம் இடம்பெயர்வும் செய்யக்கூடாது.
மேலும் வாக்கு பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் ஓட்டல்களின் மதுபான கூடங்கள் (BAR) மூடவும் இதன் மூலம் உத்திரவிடப்படுகிறது. இந்த உத்தரவை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்றாலும் அவர்கள் மீது அரசு விதிமுறைகளின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.வி.ஜெயசந்திர பானுரெட்டி, இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளார்.
.gif)
