Type Here to Get Search Results !

முகத்தில் மிளகாய் பொடி தூவி கணவனை வெட்டிய மனைவி.

போச்சம்பள்ளி அருகே மிளகாய் பொடி தூவி ராணுவவீரரை வெட்டிய மனைவி - வெட்டு  காயங்களுடன்  மருத்துவ மனையில் அனுமதி.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் நரேஷ்குமார் (42) ராணுவ வீரர். இந்த நிலையில்  கடந்த சில ஆண்டுகளாக கணவன்-மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு  இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்  

நரேஷ்குமார் ராணுவத்துக்கு சென்று விட்டார்.  பல மாதங்களுக்கு பிறகு நேற்று விடுப்பில் விட்டிற்கு வந்துள்ளார்,  அப்போது தாய் வீட்டில் இருந்த மனைவி சசிகலாவை குடும்பம் நடத்த குடிபோதையில் சென்று அழைத்துள்ளார். 

இதனால் கணவன்-மனைவிக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரம் அடைந்த சசிகலா வீட்டில் இருந்த மிளகாய் பொடியை கணவர் நரேஷ்குமார் முகத்தில் துவியும் கட்டையால் தாக்கியும் மற்றும் கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது.

வெட்டு காயங்களுடன் நரேஷ்குமார் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் கணவன் தன்னை தாக்கியதாக மனைவி சசிக்கலா கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இது குறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், நரேஷ் குமார் சிகிச்சைப் பலனி்ன்றி பரிதாபமாக இரவு உயிரிழந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies