கிருஷ்ணகிரியில் ஊராட்சி மன்ற புதிய அலுவலகத்தை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் திறந்து வைத்தார், கிருஷ்ணகிரி கட்டிகாணபள்ளி ஊராட்சியின் அலுவலகம் பிஆர்சி பள்ளி எதிரே செயல்பட்டு வந்தது இது மிகவும் பழமையான கட்டிடம் என்பதால் புதிய அலுவலகம் கட்ட ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரிதேவி கோவிந்தராஜ் தீர்மானம் நிறைவேற்றினார்.
இதையடுத்து மேல் புதூர் பகுதியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிமுடிக்கப்பட்டது இதன் புதிய அலுவலகத்தை கிருஷ்ணகிரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான செங்குட்டுவன் ரிப்பன் வெட்டி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்
இந்நிகழ்ச்சியின் போது ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரிதேவி கோவிந்தராஜ் துணைத்தலைவர் பாஸ்கர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
.gif)
