Type Here to Get Search Results !

ஆதரவற்றோர் காப்பகத்தில் நள்ளிரவில் சுவர் ஏறி குதித்து 3 சிறுவர்கள் தப்பி ஓட்டம் போலீசார் தேடும் பணி தீவிரம்.

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள பாளையம்புதூர் குறிஞ்சி நகரில் தனியார் ஆதரவற்றோர் காப்பகம் இயங்கி வருகிறது, இந்த காப்பகத்தில் ஆதரற்ற சிறுவர்- சிறுமிகள் மற்றும்,  மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்கள், குழந்தை திருமண சிறுமிகள் ஆகியோர் தங்கி படித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு நிதியுதவியுடன் பிளஸ்-2 வரை வகுப் புகள் நடந்து வருகிறது.இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இந்த காப்பகத்தில் தங்கியிருந்த 3 சிறுவர்கள், சுவர் ஏறி குதித்து தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த சந்திரப்பா என்பவரின் மகன் கிருஷ்ணன் (வயது 12), ஓசூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மகன் ஆஞ்சியப்பன் (12), தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி பட்டாபி நகரை சேர்ந்த சக்திவேல் (12) ஆகிய 3 சிறுவர்கள் காப்பகத்தில் தங்கி படித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் சிறுசிறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியாக விளங்கும் இந்த காப்பகத்தில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு இந்த 3 சிறுவர்களும், காவலாளி கவனக்குறைவாக இருந்த நேரத்தில் தப்பி ஓடி விட்டனர். காப்பகத்தில் உள்ள காம்பவுண்டு சுவரில் ஏறி குதித்து தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது, இதுபற்றி தொப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தப்பி ஓடிய 3 சிறுவர்களும் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்றார்களா? அல்லது வேறு எங்காவது சென்று விட்டார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies