Type Here to Get Search Results !

விடுமுறை நாளான இன்று ஒக்கனேக்கல் களைகட்டியது

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றலா தளத்திற்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 

இந்த நிலையில்   இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை  கடந்த மூன்று வாரங்களை விட இன்று அதிக அளவில் குவிந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த 15ஆம் தேதி மாவட்ட நிர்வாகம் நீக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் சுற்றுலா தளத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து மணல்திட்டு, ஐவர் பாணி உள்ளிட்ட பகுதிகளில் பரிசலில் சென்று இயற்கை அழகை ரசித்தும் அருவிகளின் அழகை ரசித்து மகிழ்கின்றனர். பின்னர் ஆயில் மசாஜ் செய்தும், அருவிகளில் குளித்தும் மீன் சமையலை ருசித்து மகிழ்ந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies