Type Here to Get Search Results !

விபத்து ஏற்படும்முன் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

அதியமான்கோட்டை முதல் ஓசூர் வரை நடைபெற்று வரும் பாரத்மாலா சாலை திட்டத்தின் கீழ் தற்போது அதியமான்கோட்டை முதல் சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த பணியை துரிதப்படுத்த பழைய சாலையை மூடிவிட்டு அதற்கு பதிலாக மாற்றுப்பாதையில் வாகனங்களில் திருப்பி விடப்பட்டுள்ளது, ஆனால் ஆபத்தின் விளிம்பில், கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல் வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள் வேகமாக தங்கள் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர்.

எனவே புதிய சாலைக்காக ஆக்கிரமிப்பு செய்த சாலை ஓர கிணற்றை உடனே மூட வேண்டும் அல்லது தடுப்பு சுவர் பலமானதாக பெரியதாக கட்ட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது செல்லியம்பட்டி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட அல்லியூர் பகுதியிலும், புலிகரை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட இடத்திலும் இரண்டு இடங்களிலும் இதுபோன்று அமைத்துள்ளனர் எனவே விபத்து ஏற்படும் முன்னே தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies