Type Here to Get Search Results !

மதுபோதையில் மனைவியை குத்தியவர் கைது.

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள டி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர்  முனுசாமி (வயது 38). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி (30). கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது குடிபோதையில் இருந்த முனுசாமி ஆத்திரத்தில் மதுபாட்டிலை உடைத்து மனைவி என்றும் பாராமல் நந்தினியை குத்தினார். 

இதில் பலத்த காயம் அடைந்த நந்தினி சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனுசாமியை நேற்று கைது செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies