Type Here to Get Search Results !

புன்செய் சாகுபடிக்கு நாகாவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், நாகாவதி அணையிலிருந்து 2021 - 2022 ஆம் ஆண்டிற்கு இரண்டாம் போக புன்செய் பயிர் சாகுபடி பாசனத்திற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, இன்று  தண்ணீர் திறந்து வைத்தார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் அளித்தபோது: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், நாகாவதி அணையிலிருந்து 

அரசு ஆணையின்படி 2021 - 2022 ஆம் ஆண்டிற்கு இரண்டாம் போக புன்செய் பயிர் சாகுபடி பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறந்து வைக்கப் பட்டுள்ளது. 

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், நாகாவதி நீர்த்தேக்கதிலிருந்து தற்போது உள்ள தண்ணீர் வரத்தைக்கொண்டும், பென்னாகரம் வட்டத்திலுள்ள ஆயக்கட்டு பகுதிகளுக்கு பயன்பெறும் வகையில் இடது மற்றும் வலதுபுறக் கால்வாயில் ஒவ்வொரு கால்வாயிலும் இரண்டு மண்டலங்களாக பிரித்து முதல் மண்டலத்திற்கு 5 நாட்கள் இரண்டாவது மண்டலத்திற்கு 5 நாட்கள் தண்ணீர் விட்டு பின்னர் 5 நாட்களுக்கு நிறுத்தியும் முறை வைத்து வினாடிக்கு 39.80 கன அடி வீதம் 14.02.2022 முதல் 100 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதன்மூலம் பென்னாகரம் வட்டத்திலுள்ள அரகாசனஅள்ளி, சின்னம்பள்ளி மற்றும் பெரும்பாலை வருவாய் கிராமங்களில் உள்ள 1993 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

விவசாய பெருங்குடி மக்கள் நீர்வள ஆதாரத்துறை அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, இந்நீரினை சிக்கனமாக பயன்படுத்தி சாகுபடி செய்து அதிக விளைச்சல் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies