இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராஜா தலைமை வகித்தார், திருப்பூர் மக்கள் அமைப்பு மாநில திட்ட பயிற்சியாளர் மெல்வின் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகள் இடைநிற்றல் மற்றும் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பஞ்சாலைகளில் பெண் தொழிலாளர்கள் கண்ணியமான பணி சூழல் குறித்த கலந்தாய்வில் பயிற்சி அளித்தார்.
இதில் பென்னாகரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் செல்வம், பெண்ணாகரம் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக் காவலர் லட்சுமி, தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சரவணன், ஐ ஆர் டி ஓ தொண்டுநிறுவனம் கமலக்கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தமிழக விடுதிகள் பாதுகாப்பு சட்டம் குறித்து தர்மபுரி இளம் சிறார் நீதி குழுமம் உறுப்பினர் வழக்கறிஞர் ரவி, உள் புகார் குறித்து ரீடு பவுண்டேஷன் நிர்வாகி ராமதாஸ், உள் புகார் குழு நடைமுறை சிக்கல்களும் தீர்வுகளும் குறித்து விஐபி தொண்டு நிறுவனம் சரளா செந்தில்குமார் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் தொண்டு நிறுவன நிர்வாகிகள் கென்னடி, மகாலட்சுமி, மகேந்திரன், கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ரியல் பவுண்டேசன் நிர்வாகி தனலட்சுமி நன்றி கூறினார்.
தகடூர் குரல் நாவல்கள் படிக்க
.gif)
