Type Here to Get Search Results !

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மனு அளித்தனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான  சங்கத்தின்  சார்பில் பாலக்கோடு வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து  நியாய  விலைக் கடைகளின் முன்பு   மாற்றுத் திறனாளிகள்  வரிசையில் நின்று ரேஷன் பொருட்கள் வாங்குவது மூலம் அவர்களுக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். 

இதனால் நேற்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான  சங்கத்தின் மூலம் பாலக்கோடு வட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் முன்பு மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நிற்காமல் நேரடியாக அவர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்க  உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பாலக்கோடு வட்ட வழங்கல் அலுவலர் முல்லைக்கொடியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். 

இதில் மாற்றுத்திறனாளிகளின் தலைவர் அண்ணாமலை. செயலாளர் திம்மன். துணைத் தலைவர் பழனி. சட்ட ஆலோசகர் செல்வம் ஆகிய மாற்றுத்திறனாளி நிர்வாகிகள் உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies