தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி அறிவியல் வேளாண் பயிற்சி மையத்தில் திருச்சி மகளிர் தோட்டக் கலை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயிலும் இளங்கலை மாணவிகள் ஊரக தோட்டக் கலை பயிற்சிக்காக 50 மாணவிகள் பாப்பாரப்பட்டி அறிவியல் வேளாண் மையத்தில் இருந்து பாலக்கோடு வட்டம் பெல்லுஹள்ளி கிராமத்தில் உள்ள துள்ளியப் பண்ணை காய்கறி சாகுபடி தொழில் நுட்பப் பயிற்சிக் கூடத்தில் குழித் தட்டில் நாற்றங்கால் வளர்க்கும் செயல் முறை பயிற்சியையும் அதன் பயன்கள் குறித்தும் செயல் முறை விளக்கத்துடன் நேரடிப் பயிற்சி அளித்தனர்.
பாப்பாரப்பட்டி அறிவியல் வேளாண் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் விஜயகுமார் தோட்டக்கலை உதவிப் பேராசிரியர் முனைவர் ஸ்ரீவித்யா தோட்டக் கலை விரிவாக்க உதவிப் பேராசிரியர் முனைவர் வெண்ணிலா ஆகியோர் உடனிருந்தனர்.
.gif)

