தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று அதியமான் கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டது.
கபடி, கைப்பந்து, 100, 200மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ் மனித உரிமைகள் மண்டல ஒருங்கிணைப்பாளர் செந்தில் ராஜா தலைமையில் வழங்கப்பட்டது. விளையாட்டு வீரர்களை நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வாழ்த்தி பேசினார். போட்டிகளின் நடுவர்களாக அதியமான் கோட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் உடல்கல்வி ஆசிரியர் மாது மற்றும் கருணாநிதி, தேவேந்திரன் ஆகியோர் சிறப்பாக பணியாற்றினர்.
விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நேரு யுவ கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர்கள் கபில்தேவ் மற்றும் முனியப்பன் செய்திருந்தனர்.நிறைவாக நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் நன்றி கூறினார்.
.gif)
