தர்மபுரி நகராட்சி 33 வார்டுகள் உள்ளது வருகின்ற 19ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது அதை ஒட்டி அனைத்து கட்சி அதிமுக திமுக பாமக தேமுதிக பாரதிய ஜனதா கட்சிகள் அந்தந்த பகுதிகளில் தீவிரமாக வாக்குகள் சேகரித்து வருகின்றனர் இன்று தர்மபுரி கடைவீதி பகுதியில் தர்மபுரி நகராட்சி 23வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் பிஎன் நாகராஜன் அவருக்கு முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ் ஆர் வெற்றிவேல் தெருத்தெருவாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.
உடன் தர்மபுரி நகர கழக செயலாளர் பூக்கடை ரவி மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் பொன் வேல் நல்லம்பள்ளி ஒன்றிய கழக செயலாளர் சிவப்பிரகாசம் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நகர தலைவர் பிரசாத் கட்சி நிர்வாகிகள் மாது கூட்டுறவு பண்டகசாலை இயக்குனர் மாதேஷ் ஜீவா விஜயகுமார் சரவணன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு கடைவீதி பகுதி முழுவதும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.
23வது வார்டு அதிமுக வேட்பாளர் RN நாகராஜன் அப்பகுதிக்கு அடிப்படை வசதியான குடிதண்ணீர் சாலை வசதி தெருவிளக்கு வசதி கழிவுநீர் கால்வாய் அப்பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் போன்ற வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு தெரிவித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்..
.gif)
