Type Here to Get Search Results !

ஓட்டு போட வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இத கொண்டுபோய் ஓட்டு போடுங்க.

தருமபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள தருமபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகளுக்கும் மற்றும் அரூர் பேரூராட்சி, பாலக்கோடு பேரூராட்சி, பென்னாகரம் பேரூராட்சி, பி.மல்லாபுரம் பேரூராட்சி,கடத்தூர் பேரூராட்சி, கம்பைநல்லூர் பேரூராட்சி, காரிமங்கலம் பேரூராட்சி, மாரண்டஅள்ளி பேரூராட்சி, பாப்பாரப்பட்டி பேரூராட்சி, பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி ஆகிய 10 பேரூராட்சிகளில் மொத்தம் 159 வார்டுகளில் பாலக்கோடு பேரூராட்சியில் 2 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அந்த 2 வாக்குச்சாவடிகள் நீங்கலாக 157 வார்டுகளுக்கும் என தருமபுரி நகராட்சிமற்றும் 10 பேரூராட்சிகளில் மொத்தம் 190 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுகின்றது. இதில் மொத்தம் 801 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 85,579 ஆண் வாக்காளர்களும், 89,936 பெண் வாக்காளர்களும், 15 இதர வாக்காளர்களும் என மொத்தம் 175,530 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவ்வாக்கானர்கள் வாக்குளிக்க ஏதுவாக 70 வாக்கச்சாவடி மையங்களில் 37 ஆண் வாக்காளர்கள் மட்டும் வாக்களிக்கும் வாக்கச்சாவடிகளும், 37 பெண் வாக்காளர்கள் மட்டும் வாக்களிக்கும் வாக்கச்சாவடிகளும் மற்றும் 154 ஆண், பெண் உள்ளிட்ட அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும் வாக்கச்சாவடிகளும் மொத்தம் 228வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

வாக்காளர்கள் வாக்களிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தருமபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் 2022-க்கான தேர்தல் பிரச்சாரம் நாளை (17.02.2022) வியாழக்கிழமை 6.00 மணியுடன் நிறைவு பெறுகிறது. 

தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற 19.02.2022 சனிக்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும். தருமபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள தருமபுரி நகராட்சிக்கு 69 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், அரூர் பேரூராட்சிக்கு 36 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், பாலக்கோடு பேரூராட்சிக்கு 22 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், பென்னாகரம் பேரூராட்சிக்கு 22 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், பி.மல்லாபுரம் பேரூராட்சிக்கு 18 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், கடத்தூர் பேரூராட்சிக்கு 18 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், கம்பைநல்லூர் பேரூராட்சிக்கு 18 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், காரிமங்கலம் பேரூராட்சிக்கு 18 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு 18 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்கு 18 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சிக்கு 18 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் என மொத்தம் 275 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM Machines) (ரிசர்வ் ஒதுக்கீடு 47 சேர்த்து) கணினி மூலம் குலுக்கல் முறையில் (Second Randomization) ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு அம்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM Machines) போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்களுடன் கூடிய வாக்குச் சீட்டுகள் வேட்பாளர்கள் முன்னிலையில் பொருத்தும் பணிகள் முடிவுற்று அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் இருப்பு அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சிசிடிவி கேமராக்கள் பெறுத்தப்பட்டும், துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் தேர்தல் வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள்- 2022-லில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்குச்சாவடி சீட்டு (Booth Slip) உள்ளவர்களும் அல்லது வாக்குச்சாவடி சீட்டு இல்லாதவர்களும் வாக்காளர் அடையாள அட்டை (EPIC), அல்லது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள கீழ்க்காணும் 11 அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம்.
  1. ஆதார் அட்டை.
  2. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை.
  3. புகைப்படத்துடன் கூடிய வங்கி / அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்.
  4. தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு.
  5. ஓட்டுநர் உரிமம்.
  6. நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN CARD).
  7. தேசிய மக்கள் பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு (Smart Card).
  8. இந்திய கடவுச்சீட்டு (Indian Passport).
  9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.
  10. மத்திய / மாநில அரசு, மத்திய / மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களால் / வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்.
  11. பாராளுமன்ற / சட்டமன்ற / சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை.

எனவே, வாக்காளர்கள் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்களில் வாக்குப்பதிவின் போது ஆள் மாறாட்டங்களைத் தவிர்க்க மேற்காணும் அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம். என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies