Type Here to Get Search Results !

"முன் மாதிரி கிராம விருது 2022" - விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு.

சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் 2021-2022-ஆம் ஆண்டிற்கான "முன் மாதிரி கிராம விருது" வழங்க ஏதுவாக தருமபுரி மாவட்டத்தில்லுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளும் விருது பெறுவதற்கான தகுதியினை அடையும் வகையில் பொது மக்களின் ஒத்துழைப்புடன் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தகவல். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்த தாவது:-

சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசால் "முன் மாதிரி கிராம விருது" தோற்றுவிக்கப்பட்டு மாவட்ட அளவில் ஒரு கிராம ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு "முன் மாதிரி கிராம விருது" வழங்கி கௌரவிக்கப்படுவதுடன் விருதிற்கான கேடயமும், ரூ.7.50 இலட்சம் (ரூபாய் ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும், மேலும், மாவட்ட அளவிலான விருதுடன் சிறப்பாக செயல்படும் மூன்று ஊராட்சிகளுக்கு மாநில அளவில் "முன் மாதிரி கிராம விருது" வழங்கி அதற்கான கேடயமும், தலா 15 இலட்சம் ரூபாய்பரிசுத்தொகையும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தருமபுரி மாவட்டத்தில் பின்வரும் திட்டங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் சிறந்த ஊராட்சிகள் தேர்வு செய்யப்படவுள்ளது. அனைவருக்கும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டு திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற நிலை ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை முறையாக தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை மற்றும் நெகிழிக்கழிவு மேலாண்மை திட்டம் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்,

திறந்தவெளியில் கழிவுநீர் தேங்காத வகையிலும் கழிவுநீர் மேலாண்மை திட்டத்தினை சிறப்பாக மேற்கொண்டிருக்க வேண்டும். ஊராட்சியின் எந்த பகுதியிலும் திறந்தவெளியில் மலம் கழித்தலோ, திறந்தவெளியில் குப்பைகள் கொட்டப்பட்டோ இருக்கக்கூடாது. இது குறித்து பொது மக்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். மேற்கண்ட செயல்பாடுகளுடன் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமைச் சூழலுடன் அழகிய தோற்றம் பெற்றுள்ள ஊராட்சிகள் மாநில அளவிலான விருது மற்றும் மாவட்ட அளவிலான விருதுக்கு தேர்வு செய்யப்படவுள்ளது.

2021-2022-ஆம் ஆண்டிற்கு முன் மாதிரி கிராம ஊராட்சிக்கு விருது வழங்க ஏதுவாக தேர்வு குழுவினர் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆய்வு செய்யவுள்ளனர். எனவே, மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளும் விருது பெறுவதற்கான தகுதியினை அடையும் வகையில் பொது மக்களின் ஒத்துழைப்புடன் இத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies