நேரு யுவகேந்திரா கிருஷ்ணகிரி மாவட்ட சார்பாக காவேரிப்பட்டணத்தில் சுய சார்பு இந்தியா பயிற்சி முகாம் இன்று (16.02.2022) நடைபெற்றது. இதில் அ. அப்துல் காதர் ஏ.பி.ஏ அவர்கள் வரவேற்புரை ஆற்றி சுய சார்பு பற்றி முக்கியத்துவத்தை குறித்து விளக்கினார். இந்தியன் வங்கி ஊராக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் திரு. ஜே. ஜெகன்நாதன் மற்றும் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் செயலாளர் திரு. எம். பன்னீர்செல்வம் அவர்களும் சுய சார்பு இந்தியா பற்றி சிறப்புரையாற்றினார்கள்.
திருமதி. பி. ரோஜா தேசிய சேவை தொண்டர் நன்றியுரை கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்திரா காந்தி மகளிர் மன்றம் தலைவி திருமதி.நித்யா அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.
.gif)
