தருமபுரி மாவட்டத்தில் 2021-2022-ம் ஆண்டு ஊரக வளர்ச்சி அலகிற்கு இரும்பு கம்பிகள் உள்ளூர் விலைக்கு நிர்ணயம் செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் விலை நிர்ணயக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில், உள்ளுர் விலையின் அடிப்படையில் மூன்று மாதத்திற்கு இரும்பு கம்பிகளை கொள்முதல் செய்ய ஒரு மெட்ரிக் டன் அளவிற்கு 8mm கம்பிகள் ரூ.64,500/- மற்றும் 10mm மேல் கம்பிகள் ரூ.64,000/- என் குழு உறுப்பினர்களால் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி அலகில் 2021-2022-ம் ஆண்டு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மொத்தம் 3200 வீடுகள் கட்டப்பட உள்ளது. இதில், இதுவரை கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் போக மீதமுள்ள வீடுகளுக்கு இரும்பு கம்பிகள் தேவைப்படும் பயனாளிகள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களை (கிராம ஊராட்சிகள் ) நேரில் தொடர்பு கொண்டு இரும்புக் கம்பிகளை பெற்றுக் கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி., இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக