அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதா அவர்களின் 74வது பிறந்தநாள் விழா இன்று பென்னாகரத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அதிமுக கழக விவசாய பிரிவு தலைவர், தர்மபுரி மாவட்ட பால்வள தலைவர் டி.ஆர்.அன்பழகன் அவர்கள் தலைமை தாங்கினார். பிறந்தநாள் விழாவை சிறப்பான முறையில் அதிமுகவினர் ஏற்பாடு செய்திருந்தனர் முதலில் விநாயகர் கோவிலில் வழிபாடு செய்து ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்புகள் வழங்கி சிறப்பான முறையில் பிறந்த நாள் விழாவினை கொண்டாடினார்கள்.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் கே சி அன்பு, நகர செயலாளர் PM சுப்பிரமணியம், மதியழகன், கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் அதுசமயம் அனைத்து ஒன்றிய மாவட்ட அதிமுக கிளை கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் இந்நாள் முன்னாள் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக