மேலும், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜக்கசமுத்திரம் கிராமத்தில் அருள்மிகு ஆதிநாராயணசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. அத்திருக்கோயிலுக்குச் சொந்தமான புல எண்கள் 234/1, 264, 269-ல் மொத்தம் 17.90 ஏக்கர் நிலம் நில உடமை மேம்பாடு திட்டத்திற்கு முன்பு ஆதிநாராயணசாமி தேவதாயம் என வகைப்படுத்தப்பட்ட நிலங்கள், நில உடமை மேம்பாடு திட்டத்திற்குப் பின்னர் பல உட்பிரிவுகளாக்கப்பட்டு தனிநபர்கள் பெயர்களில் பட்டா தாக்காலகியிருந்தது.
இதனை ரத்து செய்து திருக்கோயில் பெயரில் தாக்கலாகியிருந்த நிலங்களை ரத்து செய்து அருள்மிகு ஆதிநாராயணசாமி (தேவதாயம்) பெயரில் தாக்கல் செய்து ஆணையிடப்பட்டதன் தொடர்ச்சியாக, சுவாதீனம் எடுக்கப்பட்டு வருகிறது. மேற்படி சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ.4.60 கோடி ரூபாய் ஆகும்.
.gif)
