இந்த நிலையில் மதுவுக்கு அடிமையான பிரகாஷ், அடிக்கடி மனைவி சாலாவுடன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் சம்பவத்தன்று பிரகாஷ், சாலாவுடன் வாக்குவாதம் செய்தார். இதில் சாலை அவரை கண்டித்து பேசியுள்ளார்.
இதில் மனமுடைந்த பிரகாஷ், சாலா கண்முன்பே கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். இதனால் ரத்தம் பீறிட்டு வெளியேறிய நிலையில் பிரகாஷ், வலியால் அலறி துடித்தார். உடனே பதறிய சாலா மற்றும் அவரது குடும்பத்தினர், பிரகாசை மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரகாஷ் பரிதாபமாக இறந்தார், இதுபற்றி இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப தகராறில் கட்டிட மேஸ்திரி, தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்த சம்பவம் இண்டூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
.gif)
