Type Here to Get Search Results !

வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கிவைத்தார் மாவட்ட ஆட்சியர்.

தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல் 2022-ஐ முன்னிட்டு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் தயாரித்து வழங்கப்பட்டுள்ள வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் ஒளிப்பரப்பப்படவுள்ள வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச. திவ்யதர்சினி , இஆப., அவர்கள் இன்று (07.02.2022) கொடியசைத்து துவக்கி வைத்து, பார்வையிட்டார்கள்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் வருகின்ற 19.02.2022 சனிக்கிழமை அன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்களை செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் ஒளிபரப்ப மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது, இதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் இவ்வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை இன்றைய தினம் (07.02.2022) கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.

இந்த வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தின் மூலம், இன்று (07.02.2022) முதல் 18.02.2022 வரை தருமபுரி நகராட்சி மற்றும் காரிமங்கலம் பேரூராட்சி, பி.மல்லாபுரம் பேரூராட்சி, மாரண்டஅள்ளி பேரூராட்சி, கம்பைநல்லூர் பேரூராட்சி, பென்னாகரம் பேரூராட்சி, கடத்தூர் பேரூராட்சி, பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி, பாலக்கோடு பேரூராட்சி, பாப்பாரப்பட்டி பேரூராட்சி, அரூர் பேரூராட்சி ஆகிய 10 பேரூராட்சிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களை தேர்வு செய்து, நகர்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலுக்கான வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்படுகிறது. 

எனவே, இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் வாக்காளிப்பதன் அவசியம் குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தயாரித்து வழங்கியுள்ள வாக்காளர் விழிப்புணர்வு வீடியோ படக்காட்சிகளை பார்த்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

இந்நிகழ்ச்சியில், தருமபுரி சார் ஆட்சியர் திருமதி. சித்ரா விஜயன், இஆப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) திரு.மாரிமுத்துராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (உள்ளாட்சி தேர்தல் ) திரு இரவிசந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.மு.அண்ணாதுரை உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies