கடத்தூர் அருகே நாளுமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்ட பள்ளி சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதால் பரபரப்பு.
தர்மபுரி அருகே உள்ள கேத்துரெட்டிப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 181 மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். இந்த மாணவர்களின் நலன் கருதி சுமார் 3 லட்சம் மதிப்பில் 2018 - 2019 சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் நேற்று இரவு கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் பாமக மாவட்ட பிரமுகர் இமயவர்மன், கவுன்சிலர்கள் கோபுரம் கோவிந்தசாமி, ராஜாமணி, ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா சம்பத், ஒன்றிய செயலாளர்கள் சின்ராஜ், பூமணி உள்ளிட்ட பாமகவினர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்ட பள்ளி சுற்றுச்சுவர் இடித்த இடத்தில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்தில கடத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் : எஸ் நந்தகுமார், பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்.
.gif)
