Type Here to Get Search Results !

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கிளை மாநாடு.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் பொச்சாரம்பட்டி கிராமத்தில்  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்  கிளை மாநாடு நடைபெற்றது.

கூட்டத்திற்கு தோழர் செல்வம் தலைமை தாங்கினார், கூட்டத்தில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் சி மாதையன் இன்றைய அரசியல் நிலை குறித்து பேசினார்.இந்த கிளை மாநாட்டில் பென்னாகரம் 

வட்டார செயலாளர் பி. முனியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் நரசிம்மன், வட்டக்குழு உறுப்பினர்கள் முனுசாமி, ஆடிட்டர்  மாதையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் அளேபுரம் முதல் பொச்சாரம்பட்டி வரை குண்டும் குழியுமாக உள்ள தார் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும், பொச்சாரம்பட்டி கிராமத்திற்கு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்பட வேண்டும், பொச்சாரம்பட்டி பகுதியில் புதிய  தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிளை செயலாளராக  சுப்பிரமணி ,துணை செயலாளராக சக்தி கிளை பொருளாளராக செல்வம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

இறுதியில் மாநாட்டில் கட்சி உறுப்பினர்களுக்கு மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் சி.மாதையன், வட்டார செயலாளர் பி. முனியப்பன் ஆகியோர் கட்சி உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies