Type Here to Get Search Results !

சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் ஆலையை திறக்க கோரி காத்திருப்பு போராட்டம்.

பென்னாகரம் அருகே மாவட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் புதிய இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட்ட போதிலும் அலுவலகத்தை திறக்காததால், புதிய இயக்குனர்கள் மற்றும்  உறுப்பினர்கள் சிறுதானிய உழவர் உற்பத்தியாளர். நிறுவனத்தின் ஆலை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே கௌரிசெட்டிபட்டி பகுதியில் தருமபுரி மாவட்ட சிறுதானிய உழவர் உற்பத்தியாளர். நிறுவனத்தின் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 1021 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். மாவட்ட சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவராக சிவலிங்கம் தேர்வு செய்யப்பட்டதாகவும், இவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் தெரிவித்து அவரை பொறுப்புகளில் இருந்து நீக்கி, உறுப்பினர்கள் செயற்குழுவின் மூலம் புதிய தலைவர், இயக்குநனர்கள் கடந்த ஓராண்டிற்கும் முன்னர் தேர்வு செய்தனர். 

ஆனால் பழைய தலைவர் அலுவலகம் மற்றும் ஆலையை முறையாக ஒப்படைக்காமல் இருந்து வந்தார், இதனை கண்டித்தும், தர்மபுரி மாவட்ட சிறுதானிய உற்பத்தியாளர் நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் ஆலையை திறக்கவும் புதிய இயக்குனர்கள் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவும் இன்று திங்கள்கிழமை 50க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் மற்றும் உறுப்பினர்கள் பாப்பாரப்பட்டி அருகே கெளரிசெட்டிப்பட்டியில் உள்ள சிறு தானிய உற்பத்தி நிறுவனத்தின் ஆலையின முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இந்த போராட்டத்திற்கு மாவட்ட சிறுதானிய உணவு உற்பத்தியாளர்கள் தலைவர் ராமன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் நிறுவனர் வழக்குரைஞர் ஈசன் முருகசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதுகுறித்து தகவலறிந்த பெண்ணாகரம் வட்டாட்சியர் அசோக்குமார், பாப்பாரப்பட்டி காவல் ஆய்வாளர் வேலு தேவன் ஆகியோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இதுகுறித்து பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். 

இதில் உடன்பாடு ஏற்பட்டு கலைந்து சென்றனர். இதில் இயக்குநர்கள் குழந்தைவேலு, முருகன், அழகேசன், ராஜி, கோவிந்தராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies