Type Here to Get Search Results !

"கண் துடைப்பு நாடகமாக நடத்திய பட்டா சிட்டா மாறுதல் திருத்தம்".- கிராம மக்கள் குற்றச்சாட்டு.

தருமபுரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பட்டா / சிட்டா மாற்றுதல் முகாம்கள் நடைபெற்று வருகிறது, இன்று மூக்கனஹள்ளி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு பட்டா / சிட்டா மாறுதல் முகாம் குறித்து முன்னறிவிப்பு ஏதுமின்றி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது, இது குறித்து அப்பகுதியை சார்ந்த கிராம மக்கள் கூறுகையில், மூக்கனஹள்ளி ஊராட்சியில் இன்று (16/02/2022) நடைபெறுகின்ற பட்டா / சிட்டா திருத்த முகாம் சம்மந்தமாக எங்கள் ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு எந்த ஒரு தகவலும் முறையாக வருவாய் துறை சார்பாக தரப்படவில்லை, ஒரு தண்டோரா அல்லது கை நோட்டீஸ் என எதுவுமே மக்களிடம் சென்று சேருவதில்லை, ஏதோ கடமைக்கு ஊரில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிவித்து உள்ளனர், அதுவும் முறையாக சொல்லவில்லை, இன்று ஒரு கூட்டம் நடைபெறுகிறது என்றால் நேற்று மாலை அல்லது இன்று காலை மட்டுமே தெரிவித்து உள்ளனர். 

அப்போது மக்கள் எப்படி பயன் பெறுவார்கள்? மக்களுக்கு முறையாக தகவல் தெரிவித்தால் மட்டுமே மக்கள் பயன் பெறுவார்கள். இவர்கள் முறையாக தகவல் கூறுவதில்லை, முன்கூட்டிய கூறாமல் இவர்கள் கண் துடைப்பாக நடத்துகிறார்கள். ஏன் தகவல் கூறவில்லை என்று முறையிட்டோம் அதற்கு RI (வருவாய் துறை அதிகாரி), எங்களுக்கு தாசில்தார் மாலை 5 மணிக்கு தான் சொன்னார்கள் அதனால் எங்களால் தகவல் கூற முடியவில்லை என்று அவர்கள் கூறினார்கள், வேண்டுமென்றால் தாசில்தாரிடம் நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் என்று பதில் கூறுகிறார்.

முகாம் நடைபெறுவது மக்கள் பயன் பெறுவதற்காகவே மக்களுக்கு முறையாக தகவல் கூறினால் மட்டுமே அந்த கூட்டம் சிறப்பாக இருக்கும் மக்களுக்கு தகவல் முறையாக சென்றடையாமல் நாங்களும் கூட்டம் போட்டோம் என்று ஒரு முகாம் நடைபெறுகிறது இது மிகவும் வருந்தத்தக்க செயல், முறையாக தகவல் கூறிவிட்டு நீங்கள் முகாம் நடத்தினால் மக்கள் பயன்பெறுவார்கள் இல்லையென்றால் மக்களுக்காக திட்டம் என்பது பொய்யாகி விடும் எனவே இதன் பிறகு முறையாக மக்களிடம் கூறிய பிறகு நீங்கள் முகாம் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் ஏன் இந்த குளறுபடி என்று மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த வேண்டும், என அவர் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies