தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் இளைஞர்களுக்கான சுய சார்பு இந்தியா மற்றும் நலவாழ்வு, நேர்மறை வாழ்க்கை நடைமுறை, ஆரோக்கியமான இந்தியா ஆகியவை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று தருமபுரி விஷ்வ பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பள்ளியின் தாளாளர் ரவி தலைமையில் நடைபெற்றது.
செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நிர்வாக அலுவலர் சக்திவேல் முன்னிலை வகித்தார். அரசு கலைக் கல்லூரியின் உடல்கல்வி இயக்குநர் முனைவர் பாலமுருகன், ஆதியோகி யோகா மைய ஆசிரியை ஜெயபிரியா, தமிழ் நாடு வாழ்வாதார இயக்க மாநில பயிற்றுநர் பெரியசாமி, நத்தள்ளி ஸ்பீடு தொண்டு நிறுவன துணைத்தலைவர் பெருமாள் ஆகியோர் கருத்துரை வழங்கினர். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சமூக நண்பர்கள் அமைப்பின் தலைவர் சந்துரு, பாப்பாரப்பட்டி செந்தேள் முருகன் தையல் பயிற்சி நிறுவன ஆசிரியை தமிழரசி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நிறைவாக நேரு யுவ கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர் முனியப்பன் நன்றி கூறினார்.
.gif)
