Type Here to Get Search Results !

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும் பரிசலில் சென்று மகிழ்வர். இந்த நிலையில்  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சின்னாறு கொத்திகள் என்னுமிடத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்து வந்துள்ளது. 

இதைப் பார்த்த பரிசல் ஓட்டிகள் ஒகேனக்கல் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை  கைப்பற்றி பெண்ணாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஒகேனக்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆண் சடலம் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies