தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கெட்டூர் கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வருபவர் சௌந்தர்யா. இவர் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பு முடித்துவிட்டு தற்போது பாராமெடிக்கல் படிப்பு படித்து வருகின்றார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனது பாட்டியுடன் இருந்த பொழுது அங்கு வந்த மல்லாபுரத்தை சேர்ந்த கோவிந்தசாமி மற்றும் அவருடன் பெயர் தெரியாத நபர் ஒருவர் என இரண்டு பேரும் சேர்ந்து வீட்டில் உங்க அப்பா, அம்மா எங்கே என ஆபாச வார்த்தைகளால் திட்டி, தாங்கள் கொண்டு வந்திருந்த இரும்புராடால் வீட்டிலிருந்த டிவி, பீரோ, பிரிட்ஜ், சோபா, மேற்கூரை சீட்டு அட்டை, ஜன்னல் என அனைத்தையும் அடித்து நொறுக்கி விட்டு இரும்பு ராடை காட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றுவிட்டனர்.
இதுகுறித்து உடனடியாக சௌந்தர்யா பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் பென்னாகரம் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கோவிந்தசாமி மற்றும் அவருடன் வந்தவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
.gif)
