பர்கூர் தொகுதிக்குட்பட்ட நாகஜேனஅள்ளி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன இந்த 15 வார்டுகளில் போட்டியிடுவதற்காக 71 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர், இதில் 18 பேர் வாபஸ் பெற்றனர் தற்போது திமுக 14 பேரும் அதிமுக 14 பேரும் பாமக 6 பேரும் நாம் தமிழர் கட்சி 4 பேரும் பிஜேபி 2 பேரும் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) 1 பேரும் கம்யூனிஸ்ட் (சிபிஐ) 3 பேரும் அமமுக 5 பேரும் சுயேச்சையாக 3 பேரும் மொத்தம் 53 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் பேரூராட்சியில் வார்டில் உள்ள வாக்காளர்கள் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் யார் எனத் தெரியாமல் தேடி வருகின்றனர், சில வார்டுகளை தவிர மற்ற வார்டுகளில் பெயர் மாற்றம் ஏற்பட்டுள்ளது சில குடும்பத்தை சேர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் வெவ்வேறு வார்டுகளில் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது மேலும் சம்பந்தமில்லாத வேறு வார்டுகளை சேர்ந்த பலரது ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓட்டுப்பதிவு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர்கள் தங்களின் பெயர்களை தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு மாற்றும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.ஆனாலும் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் வார்டு விட்டு வார்டு மாறி இருப்பதாக கூறப்படுகின்றது இதனால் வாக்காளர்களும் வேட்பாளர்களும் குழப்பத்தில் உள்ளனர்.
.gif)
