Type Here to Get Search Results !

சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகள் வருகையால் களைகட்டிய ஒகேனக்கல்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றலா தளத்திற்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில்   இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

சுற்றுலா தளத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து மணல்திட்டு ஐவர் பாணி உள்ளிட்ட பகுதிகளில் பரிசலில் சென்று இயற்கை அழகை ரசித்தும் அருவிகளின் அழகை ரசித்து மகிழ்கின்றனர். பின்னர் ஒகேனக்கலில் மிகவும் பிரசித்தி பெற்ற மீன் சமையலை ருசித்து மகிழ்கின்றனர். கோர்

கோரோனோ வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக  ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன்  செல்கின்றனர். அதேபோன்று இங்கு ஆயில் மசாஜ் செய்யும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர் சுற்றுலா பயணிகள் வருகை இருந்தும் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies