Type Here to Get Search Results !

நேரு யுவகேந்திரா சார்பில் விளையாட்டு போட்டிகள்.

தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் அரூர் ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டிகள் ஏ எம் எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கபடி, கைப்பந்து, 100 வை ஓட்டப்பந்தயம், குண்டு எரிதல் உள்ளிட்ட போட்டிகள் இடம்பெற்றன.  பரிசளிப்பு விழாவிற்கு ஏ எம் எஸ் நர்சிங் கல்லூரி முதல்வர் திருமதி லக்ஷ்மிபிரியா தலைமை வகித்து பரிசு வழங்கினார். பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு ஏ எம் எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திரு வெங்கடாஜலம், நிர்வாக அலுவலர் திரு இளம்வழுதி, உடற்கல்வி பயிற்றுநர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

நேரு யுவ கேந்திராவின் கணக்கு மற்றும் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் பரிசு பெற்ற அனைவரையும் வாழ்த்தி பேசினார். அரூர் பாரதியார் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் விளையாட்டு போட்டிகள் நடத்த ஒத்துழைப்பு வழங்கினர். நிறைவாக அரூர் ஒன்றிய இளைஞர் தொண்டர் ஜெய்கணேஷ் நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies