Type Here to Get Search Results !

மூங்கப்பட்டி ஸ்ரீ மாரியயம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம் விழா.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மூங்கப்பட்டி  கிராமத்தில்  அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன், விநாயகர், ஶ்ரீராமர், லட்சுமணர், சீதாதேவி மற்றும் நவகிரகங்கள் நூதன ஆலய புனராவர்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைப்பெற்றது.

இந்த விழா கடந்த 23ம் தேதி கணபதி பூஜையுடன்தொடங்கியது. 6ம் தேதி இன்று அதிகாலை4.30 மணிக்கு கலச ஆராதனை, பஞ்ச சூக்தஹோமம், துர்கா சாஸ்திர நாமம், மகா சாந்திஹோமம், பூர்ணாஹநிதி நடந்தது.இதனையடுத்து யாகசாலையிலிருந்து கும்பத்தை  பட்டாச்சார்யர்கள்  தங்கள் தலைமீது எடுத்து சென்று  கோயில் கலசத்திற்குபுனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம்செய்தனர். 

பின்னர்  கலசத்திற்கு ஊற்றியபுனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து    ஸ்ரீ மாரியம்மன், விநாயகர், ஶ்ரீராமர், லட்சுமணர், சீதாதேவி மற்றும் நவகிரகங்கள் பரிவார மூர்த்திகளுக்கு பல்வேறு திரவிய அபிஷேகங்கள் செய்யப்பட்டது. சிறப்புஅலங்காரத்தில்  ஸ்ரீ மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கொரோனா காலம் என்பதால் குறைந்த அளவு பக்தர்களே முக கவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்றி அம்மனை தரிசனம் செய்தனர்.

இந்தவிழாவையொட்டி  காலை பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் பொது மக்கள் விழாகுழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies