அனுமதியின்றி கிரானைட் ஏற்றி வந்த லாரி பறிமுதல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

அனுமதியின்றி கிரானைட் ஏற்றி வந்த லாரி பறிமுதல்.

நல்லம்பள்ளி அருகே அனுமதி இல்லாமல் கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை.

தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் கனிம வளத்துறை அதிகாரிகள் நேற்று வாகன சோதணையில் ஈடுபட்டனர். அப்போது மதுரையில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு கிரானைட் கற்கள் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது.சம்மந்தப்பட்ட லாரியை நிறுத்தி கனிம வளத்துறை அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த கிரானைட் கற்கள் அனுமதி இல்லாமல் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது.

2 பேர் கைது.

தொடர்ந்து கனிம வளத்துறை உதவி புவியியலாளர் புவனேஸ்வரி தொப்பூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். லாரியை ஓட்டி வந்த மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரேஸ்வரன் (வயது 41), கிளீனர் ரவி (45) ஆகிய இருவரையும் தொப்பூர் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் கிரானைட் கற்களுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டு நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad