லாரி மோதியது.
பெங்களூருவில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு பார்சல் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் கட்ட மேடு வழியாக நேற்று வந்தது. லாரியை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் (வயது 22) என்பவர் ஓட்டி வந்தார்தொப்பூர் கட்டமேடு என்ற இடத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது. இதில் கார் நடுரோட்டில் கவிழ்ந்தது. சிறிது தூரம் காரை, லாரி இடித்துக்கொண்டு சென்றது.
4பேர் உயிர் தப்பினர்.
இந்த விபத்தில் காரில் வந்த கோவை மாவட்டத்தை சேர்ந்த கார் டிரைவர் குமார் (40), தனகோபால் (59), பேபிசத்யா (52), சஞ்சனா (22) ஆகிய 4 பேரும் காரின் இடுபாடுகளுக்குள் சிக்கினர். அவர்கள் காரில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் காரில் சிக்கி தவித்த 4 பேரையும் மீட்டனர்.
விபத்துக்குள்ளான லாரி மற்றும் காரை அப்புறப்படுத்தி போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. இந்த விபத்தில் கார் சேதமடைந்தாலும் அதில் இருந்த 4 பேரும் உயிர் தப்பினர். இந்த விபத்தால் தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக