Type Here to Get Search Results !

வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் ஆய்வு.

நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2022 முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் நேற்று (07.02.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்பு வேலிகள் அமைத்தல், வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டு வரும் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள், வாக்கு எண்ணும் மையத்தில் சி.சி.டி.வி கேமிராக்கள் பொருத்துதல் பணிகள், வேட்பாளர்கள் மற்றும் அவரது முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வருகை தந்து அந்தந்த வாக்கு எண்ணும் இடங்களுக்கு செல்ல ஏதுவாக தனித்தனி பாதைகள் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் உத்தரவிட்டார்கள்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.கலைச்செல்வன், இகாப., தருமபுரி சார் ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன், இஆப., உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.குருராஜன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies