Type Here to Get Search Results !

மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ள பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு 35 பேருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் 2020-21 ஆம் கல்வி ஆண்டில் நீட் தேர்வில் தகுதி பெற்று, 75% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள 27 அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பல் மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்துள்ள 8 அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 35 அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச. திவ்யதர்சினி இஆப., அவர்கள் இன்று தனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் 2020-21 ஆம் கல்வி ஆண்டில் நீட் தேர்வில் தகுதி பெற்று, 7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள 27 அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பல் மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்துள்ள 8 அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 35 அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச. திவ்யதர்சினி இஆப., அவர்கள் இன்று (07.02.2022) தனது பாரட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று 2020-21 ஆம் கல்வி ஆண்டில் நீட் தேர்வில் தகுதி பெற்று, 7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் செல்வன்.ச.குமார், செல்வி.பொ.மோனிஷா, செல்வி.மா.சந்தியா, செல்வி.மாநதியா, செல்வன்.இரா.சிவா, செல்வி.கு.சண்முகபிரியா, செல்வன்.சி.சந்தானம், செல்வி.சே.ரேவதி, செல்வி.கொ.சந்தியா, செல்வன்.பெ.சிலம்பரசன், செல்வன் கு பெரியசாமி, செல்வி.செ.ஸ்ரீமதி, செல்வி.இ.தமிழரசி, செல்வன்.நா.மாதுமணி, செல்வி. அ.சவிதா, செல்வி.தொ.ஹரியரசி, செல்வி. மு.சரண்யா, செல்வன்.சா.முனிரத்தினம், செல்வி.மு.யுவசங்கரி, செல்வி.கா.பிரேமதர்ஷினி, செல்வன்.சி.பிரவீண்குமார், செல்வன்.சி.ஜெகதீஷ், செல்வி.பவித்ரா, செல்வி.பா.அஞ்சும், செல்வன் மு.சிலம்பரசன், செல்வன்.கி.இராகுல், கண்ணா, செல்வன் ஐ.இரத்தினவேல் ஆகிய 21 மாணவ, மாணவியர்கள் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர்.

மேலும், அரசு பள்ளிகளில் பயின்று 2020-21 ஆம் கல்வி ஆண்டில் நீட் தேர்வில் தகுதி பெற்று, 7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் செல்வி.த. இலாவண்யா, செல்வி.ச.இலக்கியா, செல்வன்.அ.ஹரீஷ், செல்வி.சு.விஷ்ணுபிரியா, செல்வன் தி. தமிழ்செல்வன், செல்வி.சரேவதி, செல்வி.சு.யுவஸ்ரீ, செல்வன் இரா.பிரபு 8 பள்ளி மாணவ, மாணவியர்கள் பல்வேறு பல் மருத்துவக்கல்லூரிகளில் பி.டி.எஸ் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர். 

ஆக மொத்தம் தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று 2020-21 ஆம் கல்வி ஆண்டில் நீட் தேர்வில் தகுதி பெற்று, 7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 35 மாணவ, மாணவியர்கள் பல்வேறு மரமருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப்படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச. திவ்யதர்சினி இஆப., அவர்கள் தருமபுரி மாவட்டத்தில் 2020-21 ஆம் கல்வி ஆண்டில் நீட் தேர்வில் தகுதி பெற்று, 75% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு பல் மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்துள்ள அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அறிவுரை வழங்கி பேசும்போது, நீங்கள் மருத்துவப்படிப்பில் சேர்வதற்கு உங்களுக்கு பக்கபலமாக விளங்கிய பெற்றோர்களின் பங்கை நினைவில் கொள்ள வேண்டும். மருத்துவ படிப்பை முடித்து மக்களுக்கு சேவையாற்றுவதை முக்கியமான கடைமையாக கருத வேண்டும். நீங்கள் அனைவரும் மருத்துவ படிப்புகளை சிறப்புற முடித்திட எனது பாரட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் 2020-21 ஆம் கல்வி ஆண்டில் நீட் தேர்வில் தகுதி பெற்று, 7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு பல் மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்துள்ள 35 அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச. திவ்யதர்சினி இஆப., அவர்கள் புத்தகங்கள் மற்றும் ஸ்டெதஸ்கோப்பு கருவிகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் தருமபுரி சார் ஆட்சியர் திருமதி. சித்ரா விஜயன், இஆப., முதன்மை கல்வி அலுவலர் திருது கணேசமூர்த்தி, இணை இயக்குநர் (நலப்பணிகள் ) மரு மலர்விழி வள்ளல், அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. அமுதவல்லி, துணை இயக்குநர் (சுகாதார பணிகள் ) மரு.சவுண்டம்மாள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies