Type Here to Get Search Results !

உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

அரூர்‌ வட்டத்தில்‌ தீர்த்தமலை அருள்மிகு தீத்தகிரீஸ்வரர்‌ திருக்கோயில்‌ மாசிமக தேரோட்டத்‌ திருவிழாவையொட்டி, 23.02.2022-ஆம்‌ தேதி புதன்கிழமை அரூர்‌ வருவாய்‌ கோட்டத்திற்கு உள்ளூர்‌ விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது, இந்த உள்ளூர்‌ விடுமுறையை ஈடுகட்டும்‌ வகையில்‌ 26.02.2022 (சனிக்கிழமையன்று) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளுர்‌ விடுமுறை நாள்‌ செலாவணி முறிச்‌சட்டம்‌, 1891 கீழ்‌ அறிவிக்கப்படவில்லை என்பதால்‌, உள்ளுர்‌ விடுமுறை நாளன்று, அரூர்‌ வருவாய்‌ கோட்டத்திற்குட்பட்ட சார்நிலைக்‌ கருவூலங்கள்‌, அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக்‌ கவனிக்கும்‌ பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்‌ எனவும்‌ இதன் மூலம்‌ அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies