Type Here to Get Search Results !

கல்குவாரியை மூட மக்கள் வலியுறுத்தல்.

நல்லம்பள்ளி ஒன்றியம், பாளையம்புதூர் ஊராட்சியில், சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கல்குவாரி செயல்பட்டு வருகிறது.

கல்குவாரியை சுற் றிலும், சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் வசித்து வருகின் னர். கல்குவாரியில் வெடி வைக்கும் போது அருகேயுள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற் படுவதுடன், விவசாய நிலங்களில் கற்கள் விழுகின்றது.

இதனால் அப்பகுதி மக்கள் எதிர்ப்புதெரிவித் ததால் கல்குவாரி மூடப் பட்டது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில், அமைச்சரின் உறவினர் கல்குவாரியை எடுத்து 3 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கூறு கின்றனர். தற்போது அதிக அளவில் வெடி வைக்கப்பட்டு வருவ தால், அப்பகுதி மக் களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது என குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

எனவே, வீடுகளின் அருகாமையில் உள்ள கல்குவாரியை நிரந்தர மாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies