Type Here to Get Search Results !

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; தயார்நிலையில் வாக்கு எண்ணிக்கை பணிகள்.

தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்டத்தில் மொத்தம் 190 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு 802 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 228 வாக்குச் சாவடிகளில் ஓட்டுப்பதிவு அமைதியான முறையில் நடந்தது. 

தருமபுரி நகராட்சியில் மொத்தமுள்ள 48,792 வாக்காளர்களில் 39, 703வாக்காளர்கள் வாக் களித்தனர். நகராட்சியில் 81.37சதவீதம் ஓட்டு பதிவானது. பென்னாகரம், பாலக் கோடு, பாப்பி ரெட்டிப்பட்டி, பி.  மல்லாபுரம், மாரண்ட அள்ளி, பாப்பாரப்பட்டி, அரூர், கம்பை நல்லூர் ,காரிமங்கலம் ஆகிய 10 பேரூராட்சிகளில் உள்ள 157 வார்டுகளில் 1,26,738வாக்காளர்களில் 1,01,573 பேர் தங்களது ஓட்டை போட்டனர். மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட் சிகளிலும் 80.14 சதவீதம் வாக்குகள் பதிவானது. ஒட்டு மொத்தமாக 80.49 வாக்குகள் பதிவாகி இருந்தது.

நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங் களுக்கு சீல் வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தருமபுரி அரசு கலைக்கல்லூரி கொண்டு செல்லப்பட்டன. அங்கு அரசியல் கட்சியினர் முன்னிலையில் அதிகாரிகள் அறைகளுக்கு பூட்டி சீல் வைத்தனர். 

இதன் பின்னர் அரசு கலைக் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள அறை களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் பாது காப்பு ஏற்பாடு பணி களை ஏ.டி.எஸ்.பி மற்றும் டி.எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் 300 போலீசார் சுழ்ற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர். 

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நாளை காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு எண்ணிக்கை தொடங் குகிறது காலை 7 மணிக்குள் அரசியல் கட்சிகளின் அங்கீ கரிக்கப்பட்ட பூத் ஏஜெண்டுகள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வந்து விட வேண்டும் என்று அறிவுறுத் தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று உடனுக்குடன் அறிவிப்புகள் வெளியாகும் வகையில் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சிகளின் வெற்றி நிலவரம் குறித்து நாளை காலை 11 மணி முதல் பிற்பகலுக்குள் தெரிந்து விடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies