பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மைய நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக மத்திய அரசின் வழிகாட்டுதல் படி ஸ்பார்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு மைய வளாகத்தில் நடைபெற்றது.
இதில் முதுநிலை விரிவாக்க மைய துறைத் தலைவர்கள், பேராசிரிய பேராசிரியைகள் கௌரவ விரிவுரையாளர்கள் அலுவலக ஊழியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை முதுநிலை விரிவாக்க மைய இயக்குனர் முனைவர் போ. மோகன சுந்தரம் அவர்கள் தலைமை வகித்தார்.
இந் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலரும் ஆங்கில துறை இணை பேராசிரியருமான முனைவர் சி. கோவிந்தராஜ் அவர்கள் செய்திருந்தார்.
.gif)
