Type Here to Get Search Results !

கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை; இருவர் கைது.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சேஷம்பட்டி ஏரிக்கரை அருகில் இடும்பன் கோயில் அமைந்துள்ளது. கடந்த 26-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவில் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றிருக்கிறார். மறுநாள் தனது சொந்த பணிக்காக சென்றிருந்த பூசாரி மூன்று நாள் கழித்துதான் கோவிலுக்கு வந்தார். 

அப்போது கோவிலில் ஆங்காங்கே பொருட்கள் சிதறி கிடந்தன. உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்ட பூசாரி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து குற்ற வாளிகளை தேடி வந்தனர். 

இந்த நிலையில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் நல்லம்பள்ளியை சேர்ந்த இரு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். இதில் கோவில் பூட்டை உடைத்து திருடியது தெரியவந்தது. அவர்கள் நல்லம்பள்ளி பழைய காலனியை சேர்ந்த ரத்தினவேலின் மகன் ரிக்கி பாண்டிங் (வயது-24), கோவில் தெருவை சேர்ந்த ராமமூர்த்தியின் மகன் சுந்தரமூர்த்தி (-21) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies