Type Here to Get Search Results !

மெழுகுவர்த்தி தீயில் கருகி பெண் பலி.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள இடிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரூபா 28. கணவர் பெயர் பிரகாஷ். இவர்களுக்கு முன்று குழந்தைகள் உள்ளனர் .இவர் கடந்த மாதம் 9 ஆம் தேதி வீட்டில் இரவு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து வீட்டில் வேலை பார்த்து இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பராத விதமாக ரூபாவின் துணியில் தீ பற்றியுள்ளது. 

தீ மளமளவென பரவி ரூபாவின் உடல் முழுவதும் பரவியுள்ளது. துணியில் தீ பற்றி ஏறிவதை கண்ட ரூபா அலறி கத்தி கூச்சலிட்டுள்ளார். வீட்டில் வெளியே இருந்த  அவரது கணவர் மற்றும் உறவினர்கள் ஓடி வந்து ரூபா காப்பாற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுமதித்துள்ளனர். 

இதையடுத்து அங்கு ரூபாவை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனிறி உயிரிழந்தார். இதையடுத்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள வேப்பனப்பள்ளி போலிசார் வழக்கை கோட்டாட்சியர் விசரானைக்கு அனுப்பியுள்ளனர். தீயில் கருகி பெண் உயிரிழந்த சம்பவம் இந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies