இறந்து கிடந்த யானையை வனத்துறையினர் மற்றும் வன கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
யானையின் பிரேத பரிசோதனையில் யானையின் தலையில் உலோக குண்டு இருப்பது தெரியவந்தது, மேலும் யானையை சுட்டுக்கொன்றவர்களை வனத்துறையினர் சிறப்பு குழுக்களுடன் விரைந்தனர். பின்னர் சந்தேகப்படும் வகையில் இரண்டு நபர்கள் வனப்பகுதிகள் சுற்றித் திரிந்தனர், அவர்களை பிடித்து விசாரித்த வனத்துறையினர் தாங்கள்தான் யானையை கொன்றது என ஒப்புக் கொண்டனர் மேலும் ஒருவர் தலைமறைவானார்.
இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணையில் தலைமறைவாக இருந்த மற்றொருவரும் வன அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது. வன துறையினரின் முதற்கட்ட விசாரணையில் முயல் வேட்டைக்காக பயன்படுத்தப்பட்ட கள்ளத்துப்பாக்கி முயல் வேட்டையின் போது எதிர்பாராதவிதமாக யானை துரத்தியதால் உயிரை காப்பாற்றிக்கொள்ள யானையை சுட்டதாக தெரிவித்தனர்.
.gif)
