தா பாண்டியன் முதலாமாண்டு நினைவு நாள்! மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை.!! - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 பிப்ரவரி, 2022

தா பாண்டியன் முதலாமாண்டு நினைவு நாள்! மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை.!!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தமிழ்நாடு மாநிலக் குழுவின் முன்னாள் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற   உறுப்பினருமான தோழர் தா பாண்டியன்  அவர்களின்   முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பென்னாகரம் நகர,வட்டார குழு சார்பில்  பழைய பேருந்து நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தோழர். தா. பாண்டியன் அவர்களின் திருவுருவ படத்திற்கு பென்னாகரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர். ந. நஞ்சப்பன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சிக்கு வட்டார செயலாளர் முனியப்பன் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட செயலாளர் எஸ். தேவராசன், மாவட்ட துணை செயலாளர் கோபால், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர்கள்   எஸ் கலைச்செல்வன், சி மாதையன்,  ஒன்றிய துணை செயலாளர் சம்பத்,  நகர செயலாளர் விஜயபாரதி,  துணை செயலாளர் தர்மராஜா  மாவட்டக்குழு உறுப்பினர்கள்  ஆர்.கிருஷ்ணன்,  முத்து, நாகராஜ், புதுப்பட்டி பழனி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை  செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad