ஹிஜாப் விவகாரம் : கர்நாடகா அரசை கண்டித்து பாலக்கோட்டில் ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 பிப்ரவரி, 2022

ஹிஜாப் விவகாரம் : கர்நாடகா அரசை கண்டித்து பாலக்கோட்டில் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கும் கர்நாடகா மாநில பாஜகஅரசையும், ஒன்றிய பாஜக அரசையும் கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் கலிலுல்லாஹ் தலைமை வகித்தார்,

மாவட்ட பொறுப்பு குழு நிர்வாகி இலியாஸ் வரவேற்புரை ஆற்றினார், மாநில பிரதிநிதி சாதிக் பாஷா கண்டன உரை ஆற்றினார், சாஜிதா மர்யம் சிறப்புரை நிகழ்த்தினார், சிறப்பு அழைப்பாளர்களாக திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன், சிபிஐஎம் மாவட்ட செயலாளர் குமார், விசிக மாநில துனைசெயலாளர் இராசகோபால் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

தமுமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சித்திக், காசிப் மெளலனா, அம்ஜத், ஜெய்லாப், மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமிய மாணவிகள் பள்ளி, கல்லூரிகளிலும்  ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கும் கர்நாடாகா மாநில பாஜக அரசையும், ஒன்றிய பாஜக அரசையும் கண்டித்து கண்டன கோஷங்களும் முழக்கங்களும் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள், ஜமாத்தார்கள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், இறுதியாக நகர தலைவர் நசீப்ஜான் நன்றி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad