இண்டூர் அருகே விஷம் குடித்து வாலிபர் சாவு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 பிப்ரவரி, 2022

இண்டூர் அருகே விஷம் குடித்து வாலிபர் சாவு.

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள பங்குநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முரளி (வயது 27). கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி துளசி. இவர்களுக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் மனமுடைந்த முரளி கடந்த 22-ந் தேதி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முரளி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்டது குறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad