Type Here to Get Search Results !

காப்புக்காட்டில் மாமரத்திற்கு மருந்து தெளித்த டிராக்டர் பறிமுதல்.

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட ஜம்புத் கிராமத்திற்கு அருகே முத்தாளமம்மன் கோவில்பள்ளம் ஒட்டி காப்புக்காடு உள்ளது, இங்கு சட்டவிரோதமாக சிலர் விவசாயம் செய்தும், மாமரங்களை வளர்த்தும் வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வனத்துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டன, இந்நிலையில் நேற்று முன்தினம் ஜம்புத் முத்தாளம்மன் பள்ளம் காப்புக் காட்டில் உள்ள மாமரங்களுக்கு மருந்து தெளிப்பதாக பாலக்கோடு வனசரகர் செல்வத்திற்க்கு தகவல் கிடைத்தது.

வனசரகர் செல்வம் மற்றும் வன காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது ஜம்புத் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் மயில் (வயது.27) என்பவர் டிராக்டர் மூலம் மாமரங்களுக்கு மருந்து தெளித்து கொண்டிருந்தார், டிராக்டரை பறிமுதல் செய்த வனத்துறையினர் அத்துமீறி காப்புக் காட்டில் நுழைந்து மாமரங்களுக்கு மருந்து தெளித்த குற்றத்திற்காக 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies