ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் இளைஞர் வேட்புமனு தாக்கல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 பிப்ரவரி, 2022

ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் இளைஞர் வேட்புமனு தாக்கல்.

தமிழகத்தில் நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தல் குறித்து கடந்த 26 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதி வெளியிடப்பட்டு 28 தேதி முதல் பிப்ரவரி 4 தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.பிப்ரவரி 19 ம் தேதி தேர்தல் நடைபெறுவதையோட்டி  தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என பலரும்  வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர் இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். 

இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18-வார்டுகளுக்கும் போட்டியிட அரசியல் கட்சி வேட்பாளர்கள் சுயேச்சைகள் என பலரும் வேட்புமனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர், இன்று  பென்னாகரம் பேரூராட்சி 12 வது வார்டில் போட்டியிட பல்வேறு அரசியல் கட்சியினருக்கு மத்தியில் சுயேட்சையாக களம் இறங்கும் கபிலன்  வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இவர் பெண்ணாகரம் நகரப்பகுதியில் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் அமைப்பில் செயல்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். வேட்பு மனு தாக்கலின் போது  இவருடன் சட்ட உரிமை பாதுகாப்பு சங்க இணை செயலாளர் கனகராஜ்,துணை செயலாளர் பி கே மாரியப்பன், பொருளாளர் அண்ணாதுரை, கிருஷ்ணன்  ஆகியோர் உடனிருந்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad