கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தடதாரை கிராமத்தில் நாகேஷ் என்பவது வீட்டின் அருகே 10 நீள மலைபாம்பு ஒன்று ஊர்ந்து கொண்டு வந்து கொண்டிருந்தது. இந்த பாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்து அப்பகுதி கிராம மக்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் சண்முகசுந்திரம் மற்றும் இராமன் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். இதையடுத்து அந்த மலைபாம்பை கொங்கனப்பள்ளி காப்பு காட்டில் பாதுகாப்பாக விட்டனர். ஊருக்குள் புகுந்த இந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பால் இந்த கிராமத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
.gif)
